0
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று (08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top