0
வானம் வஞ்சகமில்லாமல் நீலமாகவே மொத்த ஊருக்கும் காட்சி தந்தது.

எல்லா முற்றங்களுக்கும் சூரியன் எந்த வஞ்சனையும் செய்யாது வெளிச்சத்தை அள்ளி கொட்டியிருந்தான்.

மழைத்தூறலும் குளிர்காற்றும் என எதுவுமே மாறியதில்லை இயற்கையின் பகிர்தலில் யாருக்கும் .

பிறகு யார் வகுத்தார்கள் வாழ்வை ஏழ்மையுடனும் பசியுடனும்...?

அவன் ஒரு சின்னக்குழந்தை.அவன் பிறந்த சில மாதத்தில அவன் அம்மா விதவையாகிட்டா.ஆமா அவன் அப்பா இறந்திட்டார்.ரொம்ப வறுமையான வாழ்வை அவனுக்கு திணித்தது அப்பாவின் இழப்பு மட்டுமில்ல இலங்கை நாட்டின் போர்ச் சூழலும் தான்.

அவனது வாழ்வை அவனது பறந்து ரசித்து திரியும் வாழ்வை பசியில் துடித்து உணவுவாசனையில் ரசித்து ஏங்க வைத்தது அவன் குழந்தைபருவம்.

கொஞ்சமா சொல்லணும்னா அவன் வாழ ஆசைப்படட வாழ வழியற்ற ஒரு பட்டாம் பூச்சி.

யாராவது அவனுக்கு உணவு கொண்டுவந்து தந்திட்டாலே அவன் மனதும் உடலும் நிறைவடைந்திருக்குமே.ஆனாலும் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

வாழ்க்கை அந்த குழந்தையை பசியோடே துரத்தியது.

அவனுக்கான ஏக்கம் வயிறு நிறைவது மட்டுமே.

ஆனால் அது பலநேரங்களில் நடப்பதே இல்லை.

வறுமையும் நாட்டின் வறட்சியும் அவனை பிழிந்து ஒன்றுமில்லாமல் ஆக்கியது.

அம்மா அவள் என்னசெய்வாள். பெற்றகுழந்தயை பசியோடு பார்க்க எந்த தாயால் முடியும்? அந்த கையாலாகாத தாய்க்கு அவன்பசியில் இருக்கும்போதெல்லாம் துடித்து அழுறது தவிர வேறு வழி தோன்றியதே இல்லை.

அன்றைக்கும் காலை விடியும்போது அவன் எழுந்திருக்கப்போறானே பசித்து குழந்தை அழுவானே அம்மா துடித்தாள்.

தினமும் பசியோடு துடிக்கும் தன்குழந்தைகளை பார்த்து துடிக்க அவளுக்கு இனி சக்தியே இல்லை.

பசியும் வறுமையும் இருப்பவர்களுக்கு தன்மானமும் அதிகமாகவே இருக்கும். யாரிடமும் ஒரு நேர உணவோ பணமோ இரங்கி கேட்டுவிடக்கூடாது என்று.

அப்படி தான் அவளும் இருந்தாள். அந்த பாலகனையும்வளர்த்தாள். பசி அவனை கொல்வதை பார்க்கமுடியவில்லை. ஆனால் அவளிடம் ஏதும் இல்லை. அவளும் என்ன செய்வது.?

"கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை."

வறுமை என்பதிலும் பெரும் வறுமை உணவில்லாமல் குழந்தை கிடப்பது.அதை தாய் பார்ப்பது.

அந்த பிஞ்சு வயிறு என்ன பாவம் செய்தது.? பசித்து காய்ந்திருக்க.

அவனுக்கு தேவையானது உணவு மட்டும்தானே..?

அதை கொடுக்க முடியாத இந்த உலகம் அவனை படைத்துப்போட்டது தான் புதிர்..

ஒவ்வொரு காலைகளும் பசியின்துடித்தல்களோடு விடியல்கள்.

அன்று அம்மா எடுத்தமுடிவு வேறுவழியில்லாமல் தான்.எல்லா தாயுமே தன்குழந்தையை ராஜாவாக்கி பார்க்க ஆசைப்படும்போது அவளுக்கு அது இல்லாமலா போயிருக்கும்.ஆனாலும் வேறு வழி....??

தினமும்பசியில் துடிக்கும் பிளளையை பசிபோக்க அவள் எங்க போவாள்? 

தாய்மார்பில் சிறு குழந்தைக்கு பால் சுரக்கவைத்த இறைவா நீயாவது குழந்தை பசிக்கும் போதெல்லாம் தாயின் எலும்பில் பால் சுரக்க வைத்திருந்தால் கூட வளரும் வரை குழந்தைகளை பசியாத்தி பல தாய்கள் அழிந்திருப்பார்களே...


சுவடியாக்கம்
பேனா துளிகள் தினி

தொடரும்...

Post a Comment

 
Top