0
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரான பெண் ஒருவர் ஹொரவ்வப்பொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியட்நாமில் தொழில் வாய்ப்பைப்பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை இவர் மோசடி செய்ததாக ஹொரவ்வப்பொத்தானை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கணவரும் கைது செய்யப்பட உள்ளார்.


(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

 
Top