0

மணம்பிடிய பகுதியில் தொல்பொருட்கள் காணப்படும் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் உலாவிக்கொண்டிருந்த 10 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டர் சைக்கிள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு தொகை தேசிக்காய் கடல் மணல் ஆகியனவும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதையல் அகழ்வு பணிகளுக்காக மேற்படி தொல்பொருட்கள் நிறைந்த பகுதிகளுக்கு சந்தேக நபர்கள் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்..

கைது செய்யப்பட்டவர்கள் 40 வயது தொடக்கம் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் குருநாகல், நாரம்மல, வெலிகந்த, தெய்யத்தகண்டிய மற்றும் சுலஸ்திபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top