0

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த 3 பேர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

இல 82/21, ஸ்ரீ தர்மாராம வீதி, இரத்மலானை என்ற விலாசத்தில் வசிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

 
Top