0
ஆதிரை - (சட்ட விரோத குடியேற்ற சட்டம்)

(சயந்தனின் ஆதிரை நாவல் "நாடற்ற மனிதர்களின் அந்தரிப்பும் அலைச்சலும்.." )

இந்தியாவுக்கு திரும்பி போகாத தமிழர்கள் ஸ்ரீலங்கா நிலப்பரப்பில் அலைக்கழிக்க பட்டார்கள்..

கூலியற்ற வேலைக்காரர்களாக கங்காணி, பணக்கார யாழ்பாண தமிழர்கள்,மற்றும் பூர்வீக தமிழர் / சிங்களவர்கள் வீட்டுக்கு வேலைக்கு அனுப்ப பட்டார்கள்..

ஒரு புதுச்சாதியாக அவர்களை உருவாக்கி பயம் எனும் பூச்சியை அவர்கள் மேலே பரப்பி அந்தரிக்க வைத்தார்கள்...

இலங்கை சனக்கணக்கெடுப்பில் அவர்கள் பெயர் இருக்க சான்ஸ் குறைவு...

ஏன் என்றால் அவர்கள் நாடற்றவர் பட்டியலில் இருந்தார்கள்..

கடைசி யுத்தத்தில் செத்தது முழுக்க யாழ்ப்பாண தமிழன் அன்றோ அல்லது இலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர் என்று நினைத்தால் உங்களுக்கு யாழ்ப்பாணத்தான் மண்டை தெரியாது என அர்த்தம்...

"பாலும் அடுப்பிலே பாலகனும் தொட்டிலிலே
பாலகனை பெத்தெடுத்த பாண்டியரும் முள்ளுக்குத்த,
வேலைக்குப் பிந்ரினேன்று வெரட்டிடுவார் கங்காணி
தூங்குடா என் மகனே துயரைப்பாடி வாரேன்"


இந்த மோடி எல்லாம் மண்டையை கசக்கி இந்த சட்டத்தை கொண்டு வர முன்னமே ..

பல வருசம் முன்னாலே எங்கடை ஸ்ரீலங்கா அரசாங்கம் மலையக தமிழருக்கு இந்த சட்டத்தை பாஸ் பண்ணி கதற கதற இரங்கு பெட்டியை தலையிலேயே வைச்சு கப்பலிலில் ஏத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது...

அவ்வளவுக்கும் அவையள் மூன்று தலைமுறை ,பத்து தலைமுறை பார்த்த ஆட்கள்.

கோனக்கோன மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஓதைச்சானய்யா சின்ன தொரை

அப்படியும் சில பேர் வேறை வழி இல்லாமல்/இந்தியா ஏற்க மாட்டோம் என கங்கணம் கட்டிய போது விழி பிதுங்கி ஒழிச்சு ஓடிய போது கூலி கொடுக்காமல் பதினெட்டு மணித்தியால வேலை வாங்கியது....


இலங்கையில்

1-பூர்விக தமிழர்கள்

2-வேலைக்காக பிரிட்டிஷ் அரசால் இழுத்து வந்த தமிழர்கள்

என இருவகையான தமிழர்கள் இருந்தார்கள்...

இந்த இரண்டாம் நம்பர் உள்ள ஆட்களை தான் பலவந்தமாக இலங்கையில் இருந்து அனுப்பி வைத்தார்கள்..

அந்த கட்டாய வெளியேற்றத்தில் இருந்து ஒளிச்சு ஓடி தமிழர் பகுதிக்கு போன இந்தியா தமிழர்களை வைத்து ஒரு கழுதை போல தோட்டவேலை, வீட்டு வேலைகளை ஓயாமல் கொடுத்து ஒரு பிடி சோறு கொடுத்தார்கள்...

வன்னிக்காடுகளை அவர்கள் மூலமாக அழிக்க வைத்து
ஒரு யானையுடையை வேலையை அவர்களிடம் வேண்டி
விதைத்ததை அறுவடை செய்து எங்களுக்கு தருமாறு கட்டளை இட்டு குடில் போட்டு கொடுத்தார்கள்..

இல்லை என்றால் "விதானைக்கு சொல்வோம் பொலிஸ்க்கு சொல்வோம் என பயமுறுத்தி வைத்து இருந்தார்கள்..

ஒரு இருபது வருசம் அடிமையாக வெளிக்கேற்றைத்தாண்டி உள்ளே வராமல் இருந்தார்கள்.

மாங்கு மாங்கு என வேலை கொடுத்தார்கள்...

விடுதலைப்புலிகளின் வளர்ச்சி இந்திய தமிழர்களுக்கு சாதகமாக அமைந்தது...

அதுவே அவர்களுக்கு பாதகமாக அமைந்தது...

கடைசி யுத்தத்தில் இறந்ததில் முக்கால்வாசிப்பேர் சட்டவிரோத குடியேற்றம் சட்டத்தின் ஊடாக பயந்து தப்பியோடி தமிழர்கள் பகுதியில் வாழ்ந்த தமிழரே...

முக்கால் வாசி இல்லை என்றாலும் பாதிக்கு இந்தியா வம்சாவளி மக்களே அதிகம் பாதிப்புக்கு உட்பட்டார்கள்

சயந்தனின் ஆதிரை நாவல் ("நாடற்ற மனிதர்களின் அந்தரிப்பும் அலைச்சலும்.. ")


சுவடியாக்கம் - அச்சு
தலைப்பு - பேனா

Post a Comment

 
Top