0
அரச பணியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் குறித்து தேடி பார்த்து அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க தலைவர்களை அலரி மாளிகையில் நேற்று (14) சந்தித்த போதே பிரதமர் இதனை கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தி இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதநிதிகள் கடந்த அரசாங்க காலத்தில் தமது அங்கத்தவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், இடமாற்றம், கீழ் நிலை பதவிகளுக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், அரச பணிகளின் போது இழைத்த தவறுகளுக்காக பணி இடை நீக்கம் செய்யப்பட்டமை போன்றவற்றை அரசியல் பழிவாங்களாக கருத முடியாது என கூறினார்.

எனவே அரச பணியின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகியவர்கள் குறித்து தேடி பார்த்து அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்பட்டிருந்தாலும் இலங்கை தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகிழயதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதன்போது எடுத்துரைத்தார்.

எனவே இவ்வாறான அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் குறித்து ஆராய இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு அறிவிக்க முடியும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எடுத்துரைத்தள்ளார்.

Post a Comment

 
Top