0
நாடு முன்நோக்கி பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

´கோட்டா ஜனாதிபதி சஜித் பிரதமர் என்ற வகையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி புதியதொரு போராட்ட மார்க்கத்தை தெரிவு செய்துள்ளது.

அப்படியானால் மஹிந்த ராஜபக்ஸ எதிர்க் கட்சி தலைவரா?

கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் தனக்கு முன்பாக உள்ள பாரிய கல்லை உடைத்து முன்நோக்கி பயணிக்கும் ஒரு பலம் பொருந்திய கப்பலை ஒத்த தலைவராவார்.

ஆனப்படியால் சஜித் என்ற டைனமோ சிறிய துவிச்சக்கர வண்டிக்கு மாத்திரமே பொருந்தும் ஆனால் கோட்டா என்ற பாரிய கப்பலுக்கு பொருந்தாது.

சஜித் ஜனாதிபதியுடன் சிறந்த நட்பை கொண்டிருக்கலாம் ஆனால் முச்சக்கர வண்டியின் டைனமோவை பயன்படுத்தி பாரிய கப்பலை முன்னோக்கி நகர்த்த முடியாது.

எனவே பொதுத் தேர்தலுக்கு பின்னரும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள சஜித் பிரேமதாச முயற்சிகளை எடுக்க வேண்டும்´ என்றார்.


கம்பஹா செய்தியாளர் - சுஜித்

Post a Comment

 
Top