0

இலங்கையில் முகநூல் பயனாளர்கள் தமது முகநூல் பக்கத்தை மிகவும் கவனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி போலியான முறையில் தகவல் திரட்டி மோசடி செய்யும் முகப்புத்தக பாவனையாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளநிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sri job service என்ற பெயரில் பேஸ்புக் பக்கமொன்று இயங்கி வருவதாகவும் அதனூடாக அரசாங்கத் தொழில்வாய்ப்பு திரட்டிக் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த முகப்புத்தகப் பக்கம் மிகவும் போலியான முறையிலேயே செயற்பட்டு வருவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மோசடி நோக்கத்தில் இந்த முகப்புத்தகப் பக்கம் செயற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகவும் கவனமான முறையில் முகப்புத்தகங்களைப் பயன்படுத்துமாறு அரச அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

Post a Comment

 
Top