0

இலங்கையில் உள்ள சீதா கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு ரூ.5 கோடி நிதி வழங்கவுள்ளது.

மேலும் இந்த கோயில் சீரமைப்பு பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது .

மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இலங்கை சென்றனர்.

இவர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது.

இந்த கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ. 5 கோடி ஒதுக்கியுள்ளோம்.

எனவே இதற்கான பணிகளை துவக்குங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டு கொண்டனர்.

Post a Comment

 
Top