0

முல்லைத்தீவு - முள்ளியவளை, முறிப்பு பகுதியில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தூக்கிலிட்ட நபர் முள்ளியவளையை சேர்ந்த 28 வயதான ராமச்சந்திரன் வசந்த ராஷா என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றில் குறித்த நபர் தொடர்பில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. அவர் அவ்வழக்கிற்கு செல்லாத நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு சார்பாக பிணை கையொப்பமிட்ட அவரது சகோதரர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சென்று வழக்கினை பார்ப்போம் என தனது தம்பியிடம் கூறியுள்ளார்.

எனினும் குறித்த நபர் கைது பயத்தில் நீதிமன்றம் செல்வதற்கு அஞ்சி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

 
Top