0
சற்று முன் யாழ் பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவர் கொலை செய்ய்பபட்ட நிலையில் சடலமாக கடலுக்குள் மிதந்தவண்ணம் உள்ளார்.

அவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்து அப்பகுதியில் உள்ள அதிரடிப்படை முகாமில் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவி பேருவளை பகுதியை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவி ரோசினி ஹன்சனா (வயது29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Post a Comment

 
Top