0


தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல ஒரு மனதாக வாழ்வதை காண்பதே தனது பிரார்த்தனை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இலங்கை இரட்டையர்கள் சங்கம் நேற்று நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒரே நேரத்தில் இந்த உலகை கண்ட 25 இரட்டையர்களுடன் 1996 ஆம் ஆண்டு உருவான இந்த சங்கத்தில் தற்போது 2800 இரட்டையர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

8004 இரட்டையர்களை ஒன்றிணைத்து இந்தியாவில் நடத்திய நிகழ்வே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது.

ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்வில் 12492 இரட்டையர்கள் பங்கேற்றனர். இதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இவ்வாறு இரட்டையர்களை ஒரே நிகழ்வில் பங்குபெற செய்தமையை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த இரட்டையர்களில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

எந்த இனமானாலும் இரட்டையர்களை போல் சிங்திக்கும், வாழும் மக்களை உருவாகும் நாளை காண்பதே எனது பிரார்தனையாகும்.

பொது ஜன முன்னணி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜ கட்சி, கமினியூஸ்ட் கட்சி ஆகியன நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன.

ஆனால் சில கட்சிகளின் பெயரை சொல்லும் போது அவர்கள் சர்வாதிகாரிகள் என்பது புலப்படும்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டை விற்பார்கள், நாட்டை பிளவுப்படுத்துவார்கள் என மக்கள் கூறுகின்றனர். ஆனபடியால் தேசிய இரட்டையர் தினத்தை பிரகடனப்படுத்துமாறு கேட்டுள்ளேன. அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top