0

தமிழர் திருநாளாம் தைத் திருநாளை சிறப்பிக்கும் வண்ணம் யாழ்ப்பாணம் இளவாலை வாலிபர் சங்கத்தின் எற்பாட்டில் இன்றையடிதினம் பட்டம் ஏற்றும் போட்டி இடம்பெற்றுள்ளது.

போட்டியானது யாழ் காங்கேசன்துறை கடற்கரையில் கலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

பட்டம் ஏற்றும் போட்டிக்கு இந்த வருடம் சுமார் 60 மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

போட்டிக்கு விடப்பட்ட பட்டங்களில் மயில் பட்டம் அனைத்து பார்வையாளர்களின் மனங்களையும் கவர்ந்து இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது கடந்த 2013 ஆண்டு தொடக்கம் தைப்பொங்கல் விளையாட்டு விழாவினை நடாத்தி வருகின்றது.


Post a Comment

 
Top