0

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்காக சீனாவில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது.

கடந்த 8 தினங்களில் ஆயிரம் படுக்கையறைகளுடன் இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக இதுவரை 362 பேர் சீனாவில் பலியாகி உள்ளனர், 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனை கொரோன வைரஸ் தொற்றாளர்களுக்கு சிறந்த வகையில் சிகிச்சை வழங்குவதற்காக இது பெரிதும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Post a Comment

 
Top