0
தனது 30-வது திரைப்படத்துக்காக இயக்குநர் பா ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்யா.

’உங்களைப் பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது’ என நடிகர் ஆர்யாவைப் பார்த்து அவரது மனைவியும் நடிகையுமான சயீஷா கலங்கி உள்ளார்.

நடிகர் ஆர்யா தற்போது தனது 30-வது திரைப்படத்துக்காகத் தயாராகி வருகிறார். தனது 30-வது திரைப்படத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்யா. 

இத்திரைப்படத்துக்காக தனது உடல் கட்டமைப்பை மாற்றியுள்ள ஆர்யா தொடர்ந்து தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த உடற்பயிற்சி வீடியோக்களை சமீபகாலமாகத் தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கங்களிலும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று ஆர்யா வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோவில் அவரைப் பயிற்சியாளர் ஒருவர் கட்டையால் அடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்தப் பதிவை டேக்செய்து ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சயீஷா, “உங்களைப் பார்க்கும்போது எல்லாம் வலிக்கிறது. கடினமாக உழைக்கிறீர்கள்” என நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

 
Top