0
சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன பூக்கடைக்காரன்.. 

பட்டாசுக்கடைக்காரன் குட்டி ஸ்டோரி சினிமாவை தாண்டி அரசியல்வாதிகள் இடையேயும் அதிர்வலையை கிளப்பியது.

நாளை நடைபெற உள்ள மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க, சினிமா உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆவலோடு காத்திருக்கிறது.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் மாஸ்டர் இசை வெளியீட்டுக்காக பிரத்யேகமாக ரெடியாகி வருகிறது.

லைவ் டெலிகாஸ்ட்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலை செய்யாத போதே, சமூக வலைதளங்களில் செல்போன் கேமரா வீடியோக்கள் மூலம் விஜய் பேசிய பேச்சு அதிர்வலையை கிளப்பியது. 

இந்நிலையில், நாளை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் லைவ் பேச்சு, தலைப்புச் செய்திகளாவது நிச்சயம்.

டி.ஆர்.பி எகிறும்

மெர்சல், சர்கார் இசை வெளியீட்டு விழாவை லைவ் டெலிகாஸ்ட் செய்து டி.ஆர்.பியை எகிற விட்ட சன் டிவி, நாளை மாலை நடைபெறவுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் நேரலையில், மேலும் ஒரு இமாலய டி.ஆர்.பி சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்கார், பிகில் படங்களை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெடியாகுது லீலா பேலஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரஸ் மீட் அண்மையில் லீலா பேலஸில் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் லீலா பேலஸில் தான் நடக்கிறது. 

இசை வெளியீட்டு விழா என்பதற்காக, பிரத்யேகமாக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அவற்றின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

80 கோடி

பிகில் படம் சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது, மாஸ்டர் பட சம்பளம் தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டது. 

சோதனை முடிவில், பிகிலுக்கு விஜய் வாங்கிய சம்பளம் 50 கோடி ரூபாய் என்றும், மாஸ்டர் படத்துக்கு விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளம் என்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன பேசுவார்?

பிகில் இசை வெளியீட்டு விழாவில், தனது ரசிகர்களை தாக்கியது குறித்து கோபப்பட்டு விஜய் பேசியிருந்தார். 

ஆனால், சமீபகாலமாக வருமான வரித்துறையை வைத்து நடிகர் விஜய்யை மிரட்டுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், விஜய் என்ன பேசப்போகிறார்? என்ன குட்டி ஸ்டோரி சொல்லப் போகிறார்? இல்லை செயலில் பார்த்துக் கொள்ளலாம் என அதனை இக்னோர் செய்வாரா என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.

Post a Comment

 
Top