0
சென்னை: சென்னையில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை அந்த ஹீரோவின் கட் அவுட்டை வணங்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது.

சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் வசித்து வந்தவர் பத்மஜா (23). துணை நடிகை. இவர் வசித்த வீட்டின் கதவு அதிக நேரமாகியும் திறக்கப்படவில்லை.

சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார். தற்கொலை அப்போது மின் விசிறியில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கதவை உடைத்து சென்று பத்மஜாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்மஜா தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவை பெங்களூரில் உள்ள தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அதில் அவர் கண்ணீர் விட்டு கதறியபடி தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பத்மஜாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பத்மஜா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூருக்கு வந்துள்ளார். பத்மஜாவின் கணவர் பவன். இவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். சினிமாவிலும் விளம்பர படங்களிலும் துணை நடிகையாக நடித்துவருவதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார் பத்மஜா. 

கடந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பவன் ஆந்திரா சென்றுவிட்டார். பத்மஜாவின் உறவினர் குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டார். இதையடுத்து உறவுக்கார வாலிபருடன் வசித்து வந்துள்ளார். 

கணவர் இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் வீட்டை காலி செய்யுமாறும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அவருடன் தங்கியிருந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட நடிகை, தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் தீவிர ரசிகை என்பது தெரியவந்துள்ளது. அவரது ஒவ்வொரு பட ரிலீஸையும் கொண்டாடும் பத்மஜா, ஜனவரி மாதம் அவர் நடித்த சரிலேரு நீக்கெவ்வரு படம் ரிலீஸ் ஆனபோது மகேஷ்பாபுவின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து புகைப்படம் எடுத்திருந்தார். அப்போது இந்தப் படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top