0
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரெய்டு விவாகரம் குறித்து விஜய் பேசுவாரா? மாட்டாரா? என்ற யூகங்கள் எழுந்து வரும் நிலையில், இருக்கு தரமான சம்பவம் இருக்கு? என "வாத்தி ரெய்டு" மாஸ்டர் சிங்கிளோடு மாஸாக வருகிறார் விஜய். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ளது.

அதற்கான பிரத்யேகமான கிரெடிட் கார்டு டைப்பிலான மாஸ்டர் டிக்கெட்டுகள், முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான விஜய் ரசிகர்கள், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரலையாக பார்த்து மகிழலாம். 

குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடலை தொடர்ந்து, அனிருத்தின் அதிரடியான இசையில் மாஸ்டர் மூன்றாவது சிங்கிளாக, வாத்தி ரெய்டு என்ற பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகிறது.

அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அனல் தெறிக்கும், பார்வையுடன் விஜய் நடந்து வரும் போஸ்டர் தளபதி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. 

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், வாத்தி ரெய்டு என்ற பாடல் பல உள் அர்த்தங்களை கொண்டிருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

 
Top