0
2019-ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனையான ஆல்பமாக அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் லவ்வர் ஆல்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் உலக அளவில் அதிகம் விற்பனையான இசைத்தொகுப்பை உருவாக்கியவருக்கு ஐ.எஃப்.பி.ஐ (IFPI) அமைப்பின் சார்பில் விருது வழங்கப்படுகிறது.

இணையதளங்கள் முதல் குறுந்தகடுகள் வரை அனைத்து விதமான விற்பனையையும் சேர்த்து கணக்கிட்டு இந்த விருது வழங்கப்படுகிறது. 

2019-ம் ஆண்டில் டெய்லர் ஸ்விஃப்டின் ஏழாவது ஆல்பமான லவ்வர், விற்பனையில் சாதனை புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. டெய்லர் ஸ்விஃப்ட் இந்த விருதைப் பெறுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top