0
சென்னை: ஹிப்ஹாப் தமிழாவின் மீசையை முறுக்கு படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா, அடுத்தடுத்து படங்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது, புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.

பட வாய்ப்புகள் குறைந்த உடனே, புதிய வாய்ப்புகளை தேட, சில ஹீரோயின்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் புதுசு புதுசா போட்டோஷூட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவார்கள்.

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு, பெருசா பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஆத்மிகாவும் அந்த ரூட்டை சில காலம் ஃபாலோ பண்ணினார். எந்த ஹீரோ கூட அப்படி ஆத்மிகா தொடர்ந்து பதிவிட்ட கிளாமர் புகைப்படங்களுக்கு, தற்போது பலன் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில், ஆத்மிகா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். ஒருவழியாக ஆத்மிகாவுக்கும் அடுத்த படம் கிடைத்துள்ளது. 

இயக்குநர் யார் தெரியுமா? 

வித்தார்த் நடிப்பில் 'ஆள்' எனும் வித்தியாசமான படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் அடுத்ததாக மெட்ரோ எனும் செயின் ஸ்நாட்சிங் படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே மிரட்டினார். தற்போது, விஜய் ஆண்டனியின் புதிய படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. 

ஆக்ஸிஜன் என்னாச்சு? 

மெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ஆக்ஸிஜன் எனும் படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வந்தார். ஆனால், ஸ்ரீதேனாண்டாள் படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய காரணத்தால், அந்த படத்தின் படப்பிடிப்பு அப்படியே பாதியிலே டிராப் செய்யப்பட்டுள்ளது. 

ஆனந்த் கிருஷ்ணன் சொன்ன கதை விஜய் ஆண்டனிக்கு பிடித்துப் போக, புதிய கூட்டணி உருவாகி உள்ளது. 

கைவசம் நிறைய கடந்த ஆண்டு விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் வெளியான கொலைகாரன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தள்ளி வருகிறார் விஜய் ஆண்டனி. நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன், செந்தில் குமாரின் காக்கி மற்றும் ஆனந்த் குமாரின் புதிய படம் என வரிசையாக விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்து வருகிறார். 

புது ஜோடி 

மீசையை முறுக்கு படத்தில் நடித்த நடிகை ஆத்மிகா, அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் கெளதம் மேனன் பிரச்சனையால் இன்னும் ரிலீசாகவில்லை. அதற்கு அடுத்து ஆத்மிகா நடிப்பில் உருவான காட்டேரி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Post a Comment

 
Top